அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடத்தில் 'வீடியோ' கண்காட்சி?

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஜெ., நினைவிடத்தில்  'வீடியோ' கண்காட்சி?

சென்னை; ஜெயலலிதா நினைவிடத்தில், 'வீடியோ' கண்காட்சி அரங்கம் அமைப்பது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

மறைந்த ஜெயலலிதாவிற்கு, சென்னை, மெரினா கடற்கரையில், 50.8 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டும் பணி நடக்கிறது. இதில், ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், 'பீனிக்ஸ்' பறவை வடிவ கட்டடம் கட்டப்படுகிறது. கான்கிரீட் கலவை வாயிலாக கட்டப்படும் இதன் ஒரு பகுதி இறக்கையில், ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைகிறது.

மற்றொரு பகுதி இறக்கையில், அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒலியுடன் கூடிய, வீடியோ புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு வரும் பார்வை யாளர்கள், எளிதாக, ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். துபாய், பிரான்ஸ் நாடுகளில், இது போன்ற வீடியோ கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே தொழில்நுட்பத்தில் இந்த கண்காட்சி அரங்கத்தை, நாட்டிலேயே முதல் முறையாக அமைப்பது குறித்து, முதல்வர்இ.பி.எஸ்., நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், ஜெ., நினைவிட கட்டுமான நிறுவனம், ஜெ., நினைவிட வரைபடம் தயாரித்த கட்டட கலை நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
01-ஜூலை-202009:01:19 IST Report Abuse
RajanRajan கராச்சிலே ஏம்பா குண்டு வெடிச்சாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X