பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளில், 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சென்னை; 'சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில், வரும், 4ம் தேதி வரை, பகல், 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும்; ஆனால், வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில், வரும், 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள், 4ம் தேதி வரை, 33 சதவீத ஊழியர்களுடன், காலை, 10:00 முதல் பகல், 2:00 மணி வரை செயல்படும். பிற பகுதிகளில் வழக்கம் போல வங்கிகள் இயங்கும். ஊழியர்கள் மாற்று முறையில் பணிக்கு வரலாம்.பெட்ரோல் நிலையங்கள், காஸ் ஏஜென்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய, வினியோகஸ்தர்கள், டீலர்களிடம் மட்டுமே, ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு, நேரடி வங்கி சேவை கிடையாது.இருந்தாலும், 6ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 50 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல மாலை, 4:00 மணி வரை வங்கிகள் செயல்படும்.

பரிவர்த்தனை

அனைத்து நிர்வாக அலுவலகங்கள், காசோலை பரிவர்த்தனை பிரிவுகள் போன்றவை, 33 சதவீத ஊழியர்களுடன், 4ம் தேதி வரை செயல்படும்.அதன் பின், 50 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல் செயல்படலாம்.கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஊழியர்கள், பணிக்கு வரத் தேவையில்லை. இருந்தாலும், உரிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கொரோனா பரவாமல் தடுப்பதற்கான அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X