கொரோனா விழிப்புணர்வு இல்லைபரபரப்பாக இயங்கிய பரமக்குடி: கடைகள் அடைத்தும் பலனில்லை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடியில் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டாலும்,கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் பரபரப்பாகஇயங்கி வருவது அச் சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் பரமக்குடியில் அதிகளவில் உள்ளது. தொடர்ந்து அரசுமருத்துவமனை நர்சுகள்5 பேர், வி.ஏ.ஓ., க்கள், டாக்டர், இன்ஸ்பெக்டர், தபால் ஊழியர்கள் மற்றும்கலெக்டர் அலுவலக ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இருவர் பலியாகினர்.தொடர்ந்து டவுன் போலீஸ் ஸ்டேஷன், தபால் அலுவலகம் பூட்டப் பட்டது. மேலும் நகை கடைகள், கமிஷன் கடைகள் என தாமாக முன்வந்து கடைகளும் அடைக்கப் பட்டு உள்ளது.

வியாபாரிகள் சங்கம் சார்பில் மாலை 5:00 மணிக்குமேல் கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பரமக் குடியில் பொதுமக்கள் தொடர்ந்து நாள் முழுவதும்அச்சமின்றி பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் பரபரப்பாகவே இயங்கிவருகின்றனர். காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவற்றை முறைப்படுத்திட வேண்டும் என்றும், நகரில்அனைத்து துறை அதி காரிகள் முன்பு போல் செயல்பட்டு, பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X