பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவில் குழப்பம்

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை; தமிழகம் முழுதும், இம்மாதம் முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, நேற்று முன்தினம் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

முதல்வர் அறிவிப்பும், அதையொட்டி வெளியிடப்பட்ட அரசாணையும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. முழு ஊரடங்கு அமலில் உள்ள, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், வரும், 5ம் தேதி வரை, தற்போதைய நிலை தொடரும். வரும், 6ம் தேதி முதல், முழு ஊரடங்கிற்கு முன்பிருந்த நிலை தொடரும். இப்பகுதிகளில், 6ம் தேதி முதல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின், ஆறாம் பக்கத்தில் உள்ளது.ஏழாம் பக்கத்தில், சென்னை போலீஸ் எல்லைப்பகுதி தவிர, தமிழகத்தின் பிற பகுதி களில், இன்று முதல், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும்; 6ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமலில் இருந்த பகுதிகளிலும், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வாசகம், அரசாணையிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள், 6ம் தேதி முதல், எவ்வளவு பணியாளர்களுடன் செயல்படலாம் என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.அடுத்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், திருமண நிகழ்ச்சி, இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என, குறிப்பிடப்பட்டிருந்தது. அரசாணையில், திருமண நிகழ்ச்சியில், 50 பேர், இறுதி ஊர்வலம் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்று உள்ளது. இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்தமிழகம் முழுதும், இம்மாதம், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவலை தடுக்க, பொது இடங்கள், பணிபுரியும் இடங்கள், பயணம் ஆகியவற்றின் போது, முக கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்களில், ஒருவருக்கொருவர் குறைந்தது, 6 அடி துாரம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.பொது இடங்களில் துப்பினால், அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில், மது அருந்துவது, பான்பராக், குட்கா, புகையிலை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஜூலை-202010:15:21 IST Report Abuse
ocean kadappa india முகத்திற்கு கவசம் தேவை இல்லை. கைகளுக்கு கவசம் தேவை. நமைச்சலில் மூக்கை அடிக்கடி சொரிபவர்கள் மூக்கை சிந்துபவர்கள் தான் குரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிருமிநாசினி மருந்து ஊட்டப்பட்ட கைக் குட்டைகளை தரலாம். எங்கு போய் எதை தொட்டாலும் உடனே மருந்தூட்டப்பட்ட கைக் குட்டைகளால் தொட்ட விரல்களை மறக்காமல் துடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஜூலை-202010:07:55 IST Report Abuse
ocean kadappa india தமிழ் நாட்டில் புண்ப்ட்ட நெஞ்சங்கள் நெஞ்சுக்கு நீதி கிடைக்காமல் புகை விட்டு ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். பொது வெளியில் அவர்கள் புகை பிடிப்பதையும் தடுக்க வேண்டும். உலகில் குரோனா வாரி சென்றவர்களில் குடிகாரர்களை விட புகைவிட்டவர்கள் தான் அதிகம்.அதை மாரடைப்பு என்று மாற்றி சொல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X