கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாகன வரி வசூல் ஐகோர்ட் அறிவுறுத்தல்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சென்னை; சரக்கு வாகனங்களுக்கு, செப்டம்பர் வரை வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதுவரை, வரி செலுத்துவது தொடர்பாக, கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர், முருகன் வெங்கடாச்சலம் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கு, ஜூன் வரை அவகாசம் அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால், சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை.அதனால், எங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மோட்டார் வாகன வரி செலுத்த, செப்டம்பர் வரை விலக்கு அளிக்கக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வரி செலுத்த அவகாசம் அளித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, வரி விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கோவிந்தராமன், அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூடுதல் பிளீடர் விஜயகுமார் ஆஜராகினர்.மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 6ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். 'வாகன வரி செலுத்துவது தொடர்பாக, கடும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது' என்றும், அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X