சமூக இடைவெளி கடைப்பிடிக்காத வங்கிக்கு, சீல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி கடைப்பிடிக்காத வங்கிக்கு, 'சீல்'

Added : ஜூன் 30, 2020
Share

திருப்பத்துார்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத, இந்தியன் வங்கியின் ஆம்பூர் கிளைக்கு, வருவாய்த் துறையினர், 'சீல்' வைத்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் உமர் சாலையில், இந்தியன் வங்கி கிளை உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள், கணக்கு வைத்துள்ளனர். இதனால், எப்போதும் கூட்டமாக காணப்படும்.நேற்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், வாடிக்கையாளர்கள் கூட்டமாக வந்தனர். இதனால், கொரோனா பரவும் வாய்ப்புள்ளதாக புகார்கள் சென்றன. ஆம்பூர் தாசில்தார் பத்மநாபன் தலைமையில், வருவாய்த் துறையினர் வங்கிக்கு சென்று, வாடிக்கையாளர்களை வெளியேற்றி, 'சீல்' வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X