குப்பைக்கு தீ வைப்பு

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கிராமங்களில், குப்பைக்கு தீ வைத்து எரிப்பது அதிகரித்துள்ளது. இதனால், புகை மண்டலமாக மாறி, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.எஸ்.ராமலிங்கம்,பொள்ளாச்சி.கிராமங்களில் அலட்சியம்பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள கடைகளில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படாமல் இருப்பதால், கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.கே. பாலமுருகன்,பொள்ளாச்சி.குப்பை குவிப்பால் அவதிகிணத்துக்கடவு சக்தி மருத்துவமனை செல்லும் ரோடு அருகே, குப்பை கொட்டப்பட்டுள்ளது. சுகாதாரம் பாதிப்பதால், குப்பை அகற்ற வடபுதூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எ. மருதாச்சலம்,கிணத்துக்கடவு.நாய்த்தொல்லைஉடுமலை, போடிபட்டி மணிநகர் அருகே, தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆர்.மனோகர், உடுமலை.சுகாதாரம் பாதிப்புஉடுமலை, பெதப்பம்பட்டியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எஸ்.வஜ்ரவேல்,உடுமலை.எரியாத தெருவிளக்குஉடுமலை, மலையாண்டிபட்டணம் நால்ரோட்டில், தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், அவ்வழியில் செல்வோர் திருட்டு பயத்துக்கு ஆளாகின்றனர்.வி.மணிகண்டன்,உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X