பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் சாகுபடியில் சுழற்சி முறை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;பயிர் சுழற்சி முறையை கையாண்டு சாகுபடி செய்தால், செலவை குறைத்து, விளைச்சலை அதிகரிக்கலாம் என தெற்கு தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில், 400 ெஹக்டேருக்கு மேல் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. அதில், பந்தல் அமைத்து தக்காளி, பாகற்காய், பீர்க்கன்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து பந்தல் அமைத்துள்ளனர். அதனால், தொடர்ந்து ஒரே ரகம் அல்லது இனத்தை சேர்ந்த பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.இதனால், நோய், மற்றும் பூச்சி தாக்குதல் அதிகரித்து, மருந்து செலவு மிகவும் அதிகரித்து வருகிறது. அத்துடன், சில விளைநிலங்களில், நாளுக்கு நாள் மகசூலும் குறைந்து வருகிறது. இதை தவிர்த்து, மகசூலை அதிகரிக்க, சுழற்சி முறையில் பயிரிட வேண்டுமென தெற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்தார்த்தன் அறிவுறுத்தியுள்ளார்.அவர் கூறியதாவது:ஒரே ரக பயிரை திரும்ப பயிரிடும் போது, அந்த ரக பயிரை தாக்கும் நோய் கிருமிகள் மற்றும் பூச்சிகள் அந்த நிலத்தில் நிரந்தரமாக தங்கி, பெருகி, இழப்பை ஏற்படுத்தும். மேலும், மண்ணின் வளமும் குறையும். இதற்கு தீர்வாக, அடுத்தடுத்து சாகுபடி செய்யும் போது, வேறு வேறு பயிர்களை பயிரிட்டால், மகசூல் குறையாது. பந்தல் அமைத்த நிலத்திலும், ஒரு ரக காய்கறியை அறுவடை செய்து முடித்தவுடன், வேறு வகை காய்கறிகளை பயிரிடலாம்.இதன் மூலம், உரம், பூச்சி மருந்து செலவு குறைவதுடன், மகசூலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X