பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை எஸ்.ஐ., பலி கொரோனா பாதிப்பா?

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்; இதய நோயால் அவதிப்பட்ட போலீஸ், எஸ்.எஸ்.ஐ., கொரோனா பாதித்த நிலையில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர், கீழவாசலைச் சேர்ந்த, 56 வயது ஆண், தஞ்சாவூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில், இவருக்கு, ஜூன் 15ல், 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூன் 27ல், தஞ்சை திரும்பினார். மறுநாள் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

அன்று இரவு வெளிவந்த சோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அரசு டாக்டர்கள் கூறியதாவது:சென்னை தனியார் மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்த பாதிப்பில் இருந்த மீளாத நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இதய நோய் காரணமாகவே, அவர் இறந்தார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X