பொது செய்தி

தமிழ்நாடு

பாசன நீர் பரிசோதனை அவசியம்; வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;விவசாயிகள் தங்கள் நிலத்தின் பாசன நீரை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம், என, தெற்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. பயிர் வளர்ச்சிக்கு விளை நிலத்தில் செலுத்தும் கவனத்தை போன்று, பாசன நீரிலும் செலுத்த வேண்டும்.திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த தண்ணீரில் உள்ள சத்துக்களின் தன்மை, மண் வளத்தை பாதிக்கிறது. தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:பாசன நீரை பரிசோதித்து, அதன் சத்துக்களின் விகிதம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு, அரை மணி நேரம் மோட்டாரை ஓட விட்டு, மாதிரி நீர் சேகரிக்க வேண்டும்.சுத்தமான பாட்டிலை பயன்படுத்த வேண்டும். ஒரு லிட்டர் நீர் மாதிரி எடுத்தவுடன் பரிசோதனை செய்ய, கோவையில் உள்ள மாவட்ட மண் ஆய்வு கூடத்துக்கு அனுப்ப வேண்டும்.விவசாயின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், சாகுபடி செய்த பயிரின் பெயர், அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிரின் பெயர், நீர் சேகரித்த இடம் (கிணறு, போர்வெல், குளம், ஏரி, அணை) ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.பரிசோதனை முடிவில், பாசன நீரின் உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட், கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், நீரின் ரசாயனத் தன்மை உள்ளிட்ட விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.அதன் அடிப்படையில், நீரின் தன்மைக்கேற்ப சாகுபடியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து வேளாண் அதிகாரிகளிடம் ஆலோசனை பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X