குடியிருப்பு ரோடுகளுக்கு சாய்வுதளம் அமைக்கணும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு ரோடுகளுக்கு சாய்வுதளம் அமைக்கணும்

Added : ஜூன் 30, 2020
Share
கிணத்துக்கடவு:அணுகுபால சர்வீஸ் ரோட்டில் இருந்து, அண்ணாநகர் ரோடுகளுக்கு சாய்வுதள ரோடு அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள அணுகுபாலத்தை ஒட்டி, மேற்கு பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு, ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் மஞ்சள் நிற கோடும் போடப்பட்டுள்ளது. இந்த ரோட்டினை ஒட்டி, மேற்கு பகுதியில் அண்ணாநகர் குடியிருப்பு

கிணத்துக்கடவு:அணுகுபால சர்வீஸ் ரோட்டில் இருந்து, அண்ணாநகர் ரோடுகளுக்கு சாய்வுதள ரோடு அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள அணுகுபாலத்தை ஒட்டி, மேற்கு பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு, ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் மஞ்சள் நிற கோடும் போடப்பட்டுள்ளது. இந்த ரோட்டினை ஒட்டி, மேற்கு பகுதியில் அண்ணாநகர் குடியிருப்பு உள்ளது. இதில், ஐந்து குறுக்கு வீதிகளும், பகவதிபாளையம் செல்லும் தார்ரோடும் உள்ளது.இந்த ரோடுகளுக்கு செல்வதற்கு, நுாறு மீட்டர் துாரத்திற்கு சாய்வுதள ரோடு போடப்படாமல் உள்ளதால், வாகனங்கள் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. சாய்வுதள தார்ரோடு அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X