பொது செய்தி

தமிழ்நாடு

சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு திட்டம்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு திட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குரும்பபாளையத்தில், நடுநிலைப்பள்ளி கட்டடம், ஊராட்சி அலுவலகம், ரேஷன்கடை மற்றும் கோவில்கள் ஆகியன ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.அங்குள்ள ஓடையை ஒட்டி, 70 சென்ட் இடத்தில், 1995 - 96ம் ஆண்டில், சமுதாய நலக்கூடம், மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டன. தற்போது அவை, மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன.இதனால், கிராமத்தில் வசிக்கும் நடுத்தர, ஏழை மக்கள் வீட்டு விழாக்கள் நடத்த, சமுதாயக்கூடம் இல்லை. இதனால், புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.குரும்பபாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி கூறுகையில், ''பயன்பாடில்லாத கட்டடங்களை இடிக்க, ஒன்றிய நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதே இடத்தில், புதிதாக சமுதாயக்கூடம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அதிகாரிகளும் பார்வையிட்டு சென்றுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X