1 கிலோ தங்க கட்டியுடன் நகை தொழிலாளி மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1 கிலோ தங்க கட்டியுடன் நகை தொழிலாளி மாயம்

Added : ஜூன் 30, 2020
Share
கோவை; கோவையில், 1 கிலோ தங்கக் கட்டியுடன் தப்பிய, நகை பட்டறை தொழிலாளியை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டையில், நகை பட்டறை நடத்தி வருபவர் சிவகுமார். நகைக் கடைகளில், தங்கக் கட்டிகள் வாங்கி வந்து, ஆபரணங்கள் செய்து கொடுத்து வருகிறார்.காந்திபுரம், 100 அடி ரோட்டிலுள்ள, நகைக் கடையில், 1 கிலோ தங்கக் கட்டியை, ஆபரணங்களாக செய்து தர, 'ஆர்டர்' கொடுத்தனர்.

கோவை; கோவையில், 1 கிலோ தங்கக் கட்டியுடன் தப்பிய, நகை பட்டறை தொழிலாளியை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டையில், நகை பட்டறை நடத்தி வருபவர் சிவகுமார். நகைக் கடைகளில், தங்கக் கட்டிகள் வாங்கி வந்து, ஆபரணங்கள் செய்து கொடுத்து வருகிறார்.காந்திபுரம், 100 அடி ரோட்டிலுள்ள, நகைக் கடையில், 1 கிலோ தங்கக் கட்டியை, ஆபரணங்களாக செய்து தர, 'ஆர்டர்' கொடுத்தனர். தங்கக் கட்டிகளை வாங்கி வருவதற்காக, பட்டறை தொழிலாளியான, விருதுநகரைச் சேர்ந்த பிரபு, ௩௦, என்பவரை அனுப்பி வைத்தார்.நகைக் கடைக்கு சென்று, 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை, பிரபு வாங்கி சென்றுள்ளார்; நீண்ட நேரமாகியும் பட்டறைக்கு வரவில்லை. சிவகுமார் புகாரின்படி, ரத்னபுரி போலீசார், பிரபுவை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X