பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி பள்ளியில் முட்புதர் அகற்றம்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 நகராட்சி பள்ளியில் முட்புதர் அகற்றம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், வளர்ந்துள்ள முட்புதரை தன்னார்வலர்கள் அகற்றினர்.பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் பராமரிப்பின்றி உள்ளது. கல்வி மாவட்ட அலுவலகம் வழியாக வந்து, மைதானத்துக்குள் செல்லும் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.மேலும், குப்பையை மைதானத்துக்குள் போடுகின்றனர். மைதானம் புதர் மண்டி காணப்பட்டது. பள்ளி திறப்பதற்குள், மைதானங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், தன்னார்வலர்கள் மைதானங்களில் வளர்ந்துள்ள முட்புதரை அகற்றும் பணியில், கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். மைதானத்தில், நடை பயிற்சி செல்லும் இடம், மற்றும் புதர் மண்டிய பகுதி துாய்மைப்படுத்தப்பட்டு, புதர் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X