போதை லாரி டிரைவரால் ஆயுதப்படை போலீஸ் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை லாரி டிரைவரால் ஆயுதப்படை போலீஸ் பலி

Added : ஜூன் 30, 2020
Share
 போதை லாரி டிரைவரால்  ஆயுதப்படை போலீஸ் பலி

திருப்பூர்; மது போதையில் லாரி ஓட்டியவர், ஆயுதப்படை போலீஸ் மீது மோதியதில், அவர் பலியானார்

.திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபு, 25; ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். காங்கேயம் அருகே திட்டுப்பாறை, 'செக்போஸ்டில்' நேற்று முன்தினம் இரவு, பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, சென்னிமலையில், ஒரு கார் மீது மோதிய கன்டெய்னர் லாரி, நிற்காமல் செல்வதாக, இரவு, 11:30 மணியளவில் தகவல் கிடைத்தது.

சில நிமிடங்களில், திட்டுப்பாறை வழியே வந்த லாரியை, பிரபு நிறுத்த முயற்சி செய்தார். லாரி நிற்காமல் சென்றதால், 'டூ - வீலரில்' துரத்தி சென்றார். அவங்காளிபாளையம் பிரிவு அருகே, பிரபுவின் டூ - வீலர் மீது, கன்டெய்னர் லாரி மோதியது. இதில், அதே இடத்தில் பிரபு இறந்தார்.காங்கேயம் போலீசார், கன்டெய்னர் லாரியை நிறுத்தி, டிரைவரிடம் விசாரித்தனர். அவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன், 40, என்பதும், மது போதையில் இருந்ததும் தெரிந்தது.மேற்கு மண்டல, ஐ.ஜி., பெரியய்யா, டி.ஐ.ஜி., கார்த்திகேயன் மற்றும் எஸ்.பி., திஷா மிட்டல் ஆகியோர், காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த, பிரபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X