திருந்தாத பொதுமக்கள் :வருந்தாத அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருந்தாத பொதுமக்கள் :வருந்தாத அதிகாரிகள்

Added : ஜூன் 30, 2020
Share
 திருந்தாத பொதுமக்கள் :வருந்தாத அதிகாரிகள்

வால்பாறை:வால்பாறை புது மார்க்கெட் பகுதியில், காய்கறிகளை வாங்க வந்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காததால், கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வால்பாறை புதுமார்க்கெட்டில், காய்கறி வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டனர். ஊரடங்கு நிலையில், புதுமார்க்கெட்டில் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்து வந்த மக்கள், மாஸ்க் அணியாமலும், சமூக விலகலை கடைபிடிக்காமலும் காய்கறிகளை வாங்கி சென்றனர்.இதனால், கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டில் மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்தவும், சமூக விலகலை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்கிறார்களா என்பதை கண்டறிய, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மக்கள் கூட்டமாக வெளியே வரக்கூடாது; 'மாஸ்க்' அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என, 'மைக்' வாயிலாக கண்துடைப்பு பிரசாரத்தில் மட்டுமே, நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X