வளையல், பொட்டு வைக்க மறுத்த மனைவி; விவாகரத்து செய்ய கணவருக்கு அனுமதி

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
கவுஹாத்தி: 'கைகளில் வளையல்,நெற்றியில் பொட்டு வைக்க மறுத்த மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்' என, கவுஹாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அசாமில், புது மணப் பெண் ஒருவர், கணவர் தனிக் குடித்தனம் வராத ஆத்திரத்தில், அவர்களின் குடும்பத்தார் சித்ரவதை செய்வதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.சித்ரவதை:இதைத் தொடர்ந்து, கணவர், குடும்ப நீதிமன்றத்தில்,

கவுஹாத்தி: 'கைகளில் வளையல்,நெற்றியில் பொட்டு வைக்க மறுத்த மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்' என, கவுஹாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.latest tamil news


அசாமில், புது மணப் பெண் ஒருவர், கணவர் தனிக் குடித்தனம் வராத ஆத்திரத்தில், அவர்களின் குடும்பத்தார் சித்ரவதை செய்வதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.


சித்ரவதை:


இதைத் தொடர்ந்து, கணவர், குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மனைவியுடன் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தேன். தனிக் குடித்தன பிரச்னையால், ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். வயதான என் தாயை பராமரிக்கிறேன். அவரை கைவிட்டு வருமாறு மனைவி கூறுகிறார். நான் மறுத்ததால், குடும்பத்தார் சித்ரவதை செய்ததாக பொய் புகார் அளித்துள்ளார்.

மேலும், ஹிந்து முறைப்படி, திருமணமான பெண்கள் அணியும், வளையல், நெற்றிப் பொட்டு ஆகியவற்றை, மனைவி உதறி விட்டார். இதில் இருந்து, அவருக்கு திருமண பந்தத்தில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகவே, விவகாரத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, கணவர், கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


latest tamil newsவிருப்பமில்லை:


இந்த மனுவை, நீதிபதி, அஜய் லம்பா தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பு:வாதியின் மனைவி, கை வளையல்கள், நெற்றிப் பொட்டு ஆகியவற்றை அணியாமல் இருக்கிறார். இது, தான் திருமணமாகாதவர் என்பதை காட்டுவதற்காகவோ அல்லது கணவருடனான திருமண பந்தத்தை ஏற்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவோ இருக்கலாம்.

இதில் இருந்து, அவருக்கு கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதை குடும்ப நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மேலும், கணவரின் குடும்பத்தார் சித்ரவதை செய்ததற்கு ஆதாரம் இல்லை. இதுபோல ஆதாரமற்ற புகார்களை கணவர் மீது மனைவி கூறுவது, கிரிமினல் குற்றம் என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது. எனவே, வாதியின் கோரிக்கையை ஏற்று, விவாகரத்து வழங்கப்படுகிறது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - jammu and kashmir,இந்தியா
01-ஜூலை-202017:04:52 IST Report Abuse
shan கல்யாணமாகாமல் ஆன் பெண் சேர்ந்து வாழ்வதற்கு சட்டம் அதாவது லிவிங்கின் தொடர்பு என்று மேலும் ஆணை ஆன் பெண்ணை பெண் மணக்க சட்டம் கொண்டு வந்து ஏற்கனவே மாற்றிவிட்டார் அதற்குத்தான் ஆதரவாக முப்பத்தேழு பாராளுமன்ற உறுப்பினர் கொடுத்தார்கள் தமிழர்கள்
Rate this:
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
03-ஜூலை-202017:27:19 IST Report Abuse
தாமரை அழுகும்300+ m athukkuthaanaa?...
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
01-ஜூலை-202016:34:24 IST Report Abuse
s.rajagopalan மேற்கத்திய கலாச்சாரம் ...தினுசு , தினுசா ...பார்ப்பதுதான் ... எத்தினி நாளைக்குத்தான் ஒண்ணே.....? விடுங்க இனிமே அப்படித்தான் ....நம்ம ஆண்கள் அப்படி இருந்தானுவ ...நாங்க மட்டும் 'ஏன்' னு பெண்களும் கேட்கிறாங்க
Rate this:
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
01-ஜூலை-202011:02:41 IST Report Abuse
Arun Kumar 85% இந்துக்கள் வாழும் இந்தியாவில் கலாச்சார சீரழிவு ஏன்? புதிய இந்தியாவை நோக்கி செல்லுகிறார்களா? மேற்கத்திய உடையை அணிய தடை செய்ய வேண்டும் கட்டாயம் வளையல் போட்டு பூ வைக்க வற்புறுத்த வேண்டும். லிப்ஸ்டிக் போட தடை செய்ய வேண்டும். இந்திய இந்து கலாச்சார படி இருக்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வர முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஏன்னா நாம வேற லேவெல வாழ்ந்துகிட்டு இருக்கோம். பேருக்கு இந்து அனால் நடப்பது எல்லாம் மேற்கத்திய நாகரீகம். வடக்கே உள்ள பெண்களின் உடைகளை பார்த்தாலே தெரியும் அவங்ககிட்ட போயி பொட்டு வைங்க வளையல் மாத்துங்க நம்ம பாரம்பரியம் கலாச்சாரம் நாகரீகம்ன்னு சொன்னா மேலும் கீழுமாக நம்மளை பார்ப்பார்கள். இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் தமிழ் கலாச்சரத்தினால் இன்றும் பண்பாட்டில் தலை தூக்கி இருக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X