சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய வழக்கில் 'மாஜி' அலுவலருக்கு சிறை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 லஞ்சம் வாங்கிய வழக்கில் 'மாஜி' அலுவலருக்கு சிறை

விழுப்புரம்; லஞ்சம் வாங்கிய, 'மாஜி' நில அளவையருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுமானுாரைச் சேர்ந்தவர் ராணி, 60. இவர், தன் இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, 2016ம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆலத்துார் குறுவட்ட நில அளவையர் பிச்சமுத்து, 5௫, என்பவர், 3,௦௦௦ ரூபாய் லஞ்சம் வாங்கி, கைதானார்.வழக்கு விசாரணை, விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பிச்சமுத்துவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மோகன் நேற்று தீர்ப்பளித்தார்.பணி ஓய்வு பெற்று விட்ட பிச்சமுத்து, நேற்று கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X