பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் ஓடைகளில் கழிவுநீர் கலப்பு தடுக்க இயற்கை ஆர்வலர் கோரிக்கை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

உடுமலை:மழை நீர் ஓடைகளில், கழிவு நீர் கலப்பதை தடுத்து, துார்வார வேண்டும் என உடுமலை இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனப்பகுதியை ஒட்டி, சுண்டக்காம்பாளையம், வடபூதிநத்தம் உட்பட கிராமங்கள், அமைந்துள்ளன. இக்கிராமங்களில், இருந்து, மழை நீர் செல்லவும், ஒட்டுக்குளம் உட்பட குளங்களின் உபரி நீரை வெளியேற்றவும் ஓடைகள் அதிகம் உள்ளன.வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக்காலங்களில், குளங்களுக்கு அதிக நீர்வரத்து வரும் போது, பாதுகாப்புக்காக இந்த ஓடைகளில், தண்ணீர் வெளியேற்றப்படுவது வழக்கமாகும்.இந்நிலையில், இந்த ஓடைகள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி, பல இடங்களில், மண்மேடாக மாறியுள்ளன. ஒட்டுக்குளத்தின் மேற்குப்பகுதி ஷட்டரிலிருந்து துவங்கும் ஓடையின் கரைகள் சரிந்து, புதர் மண்டி தண்ணீர் செல்ல வழியில்லாமல், பரிதாப நிலையில் உள்ளது.இதே போல், சுண்டக்காம்பாளையம் கிராமத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஓடையில், குடியிருப்பிலிருந்து கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. வடபூதிநத்தம் கிராமத்திலுள்ள ஓடை, திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. இப்பிரச்னையை பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறையினரும் கண்டுகொள்வதில்லை.இதனால், மழைக்காலத்தில், வெள்ளநீர் குடியிருப்பில், புகுந்து சேதம் ஏற்படுகிறது. கழிவு நீர் தேங்குவதால், நோய்த்தாக்குதல் பரவுகிறது. எனவே, பருவ மழைக்காலத்துக்கு, முன், மழை நீர் ஓடைகளை, துார்வாரி, கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X