8 பைக் திருடிய 16 வயது சிறுவன்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 பைக் திருடிய 16 வயது சிறுவன்

Added : ஜூன் 30, 2020
Share
 8 பைக் திருடிய 16 வயது சிறுவன்

புதுக்கோட்டை; ஆடம்பர செலவுக்காக, எட்டு பைக்குகளை திருடிய, 16 வயது சிறுவனை போலீசார் பிடித்தனர்.

புதுக்கோட்டையில், அடிக்கடி பைக்குகள் திருட்டு போனது. நேற்று முன்தினம் இரவு, அண்டக்குளம் பிரிவு விலக்கு அருகே, 16 வயது சிறுவன் பைக் ஓட்டி வந்துள்ளார்.வாகன சோதனை நடத்திய போலீசார், சிறுவனை பிடித்து விசாரித்தனர். எட்டு பைக்குகளை திருடியதாக, சிறுவன் ஒப்புக் கொண்டார்.எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ள சிறுவன், நண்பர்களுக்கு ஆடம்பர செலவு செய்ய பைக்குகளை திருடி, அடகு வைத்ததாக கூறினார்.

அடகு வைத்திருந்த, எட்டு பைக்குகள் மீட்கப்பட்டன.வழக்கு பதிவு செய்து, சிறுவனை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி அறிவு, சிறுவனை சொந்த ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X