பொது செய்தி

தமிழ்நாடு

பிரதான ரோடுகளை இணைக்க புதிய வழித்தடம்: ரூ.48 லட்சம் செலவில் திட்டச்சாலை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 பிரதான ரோடுகளை இணைக்க புதிய வழித்தடம்: ரூ.48 லட்சம் செலவில் திட்டச்சாலை

உடுமலை:உடுமலை நகரின் தெற்கு பகுதிகளை இணைக்க, கொழுமம் ரோடு, பழநி ரோடுகளை இணைக்கும் வகையில், 60 அடி திட்டச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.உடுமலை, பழனியாண்டவர் நகர், ராமசாமி நகர் உள்ளிட்ட நகரின் தெற்கு பகுதி மக்கள், நகர நெரிசலுக்குள் வந்து, கொழுமம் ரோடு, பழநி ரோடுகளுக்கு செல்ல, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு வழியாக நகருக்குள் வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், ராமசாமி நகர் ரவுண்டானாவிலிருந்து, கொழுமம் ரோடு வரை, புதிய வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது.இரு ஆண்டுக்கு முன், ஏற்கனவே உள்ள ரோடுகளுடன், புதிய வழித்தடமாகவும், நகரின் தெற்கு பகுதி சுற்றுச்சாலையாகவும் அமையும் வகையில், தனியாரிடமிருந்து நிலமும் தானமாக பெறப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில், ரோடு அமைக்கப்படவில்லை.இந்நிலையில், மத்திய அரசின், நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், இந்த வழித்தடத்தில், புதிதாக ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.பழனியாண்டவர் நகர், ரவுண்டானா முதல், 60 அடி அகலத்தில், 280 மீட்டர் நீளம் ரோடு மற்றும் கொழுமம் ரோடு சந்திப்பு பகுதியில், ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் என, 48 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில், தனியாரிடமிருந்து நிலம் தானம் பெறப்பட்டு, புதிய வழித்தடத்தில், திட்டச்சாலை அமைக்கப்படுகிறது. ரோட்டிற்கான பணிகள் மற்றும் பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. விரைவில் பணி முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X