தமிழ்நாடு

அதிகரிப்பு :சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவம்:ஊரடங்கு காலத்திலும் எண்ணிக்கை குறையவில்லை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சிவகங்கை: கொரோனா காலத்திலும் கர்ப்பிணிகளிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்கி, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அதிக பிரசவம் நடந்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவமனை அவசரகால மகப்பேறு மற்றும் சிறப்பு சிகிச்சை பிரிவில் அதிக பிரசவம் நடக்கிறது.கொரோனா பாதிப்பிற்கு முந்தைய காலத்தில் சிவகங்கை மட்டுமின்றி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் இங்கு பிரசவத்திற்கு வந்துள்ளனர். இங்கு கர்ப்பிணிகளுக்கு நவீன வசதியுடன் பிரசவ வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஜூனில் 422 பிரசவம்மார்ச் 24 முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு ஜூலை 31 வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தனியார் கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகம் நடப்பதில்லை.சாதாரண கர்ப்பிணிகள் முதல் சிக்கல் நிறைந்த பிரசவம் வரை அனைவரும் சிவகங்கைக்கு தான் வருகின்றனர். ஒரு மாதத்திற்கு ஆலோசனை, பிரசவத்திற்காக 1430 கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர்.

மே - மாதம் மட்டுமே 504 பிரசவம் நடந்தது. இதில் 180 பேர்களுக்கு சுகப்பிரசவம், 324 பேர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துஉள்ளது. ஜூனில் 422 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளன.சவாலான 10 பிரசவம்

மே, ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் உறுதியுடன் ராமநாதபுரம் - 8, சிவகங்கை - 2 என 10 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வந்திருந்தனர். அவர்களுக்கு கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை ஏற்படுத்தி, உரிய சிகிச்சை அளித்தனர். இதனால், வைரஸ் தொற்றில் இருந்து 10 கர்ப்பிணிகளும் விடுபட்ட நிலையில் குழந்தை பிறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X