இந்திய ஏலக்காய் ஏற்றுமதி அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய ஏலக்காய் ஏற்றுமதி அதிகரிப்பு

Added : ஜூன் 30, 2020
Share

கம்பம் ; கேரளா இடுக்கி மாவட்டத்தில் சாகுபடியாகும் ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருப்பதாக கூறி வளைகுடா நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியா அதை திருப்பி அனுப்பியது.

இதனால் சில ஆண்டாக ஏற்றுமதி நடைபெறவில்லை. ஸ்பைசஸ் வாரிய பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையில் ஏலக்காய் வாங்க சம்மதித்தது. காய்களை பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.இந்தாண்டு ஆரம்பத்தில் ஏற்றுமதி துவங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கால் முடங்கிய ஏற்றுமதி தற்போது சில மாதங்களாக வளைகுடா நாடுகளுக்கு நடந்து வருகிறது.கே.சி.பி.எம்.சி., ஏலக்காய் ஏல நிறுவன இணை நிர்வாக இயக்குனர் கே.ஜியாவுதீன் அகமது கூறுகையில், 'பொதுவாக 7 முதல் 8 எம்.எம்., போல்ட் காய்கள் மட்டும் தான் ஏற்றுமதி நடைபெறும். அவற்றின் தரத்திற்கு தகுந்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X