பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை காரணம் காட்டி பணிக்கு வராத மருத்துவர்கள்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால்நடை துறையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊரடங்கை காரணம் காட்டி, முறையாக பணிக்கு வருவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட கால்நடை துறை, காஞ்சிபுரம் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.இத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெரும்பாலும், சென்னையிலிருந்து வேலைக்கு வருகின்றனர்.இந்நிலையில், ஊரடங்கு உள்ளதால், போக்குவரத்து வசதி இல்லை எனக்கூறி, பலர், முறையாக பணிக்கு வருவதில்லை என, கூறப்படுகிறது.

இது குறித்து, கால்நடை துறை வட்டாரம் கூறியதாவது:ஊரடங்கு காலத்தில், வெளியூர்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், பணிபுரியும் இடத்திலேயே தங்கி, வேலை பார்க்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.எனினும், சென்னையில் உள்ள மருத்துவர்கள், இதை பின்பற்றுவதில்லை. இது குறித்து கேட்டால், 'இ - பாஸ்' கிடைப்பது இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதனால், அவர்களுடைய பணியை, கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்களை வைத்து, செய்து வருகிறோம். வேலைக்கு வராத மருத்துவர்களை, இணை இயக்குனரும் கண்டுகொள்வதில்லை.இவ்வாறு, துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X