இழப்பீடு அதிகரிக்க மக்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு அதிகரிக்க மக்கள் போராட்டம்

Added : ஜூன் 30, 2020
Share

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே மேலுார்--காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 383க்கான பணி நடைபெற்று வருகிறது.

நேற்று தேவரம்பூர் பகுதியில்பணி நடந்த போது சாலைக்கு நிலம் கொடுத்த கிராமத்தினர் வந்து முந்தைய தேசிய நெடுஞ்சாலையின் போது நிலமெடுப்பிற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை போல சென்டிற்கு ரூ.60 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சாலை பணிகள் பாதிக்கப்பட்டன.நிலமெடுப்பு தாசில்தார்கள் மாணிக்கவாசகம், சுமதி ஆகியோர் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணிக்கவாசகம் கூறுகையில், 'அரசு வழிகாட்டும் மதிப்பின்படி விலை நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. கடந்த முறை மானாமதுரை--தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை கோரியுள்ளனர். கிராமத்தினரின் கோரிக்கை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X