பொது செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கம் நுழைவுவாயிலில் போலீசார் தடுப்பால் சர்ச்சை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : கல்பாக்கம் நுழைவு வாயிலில், நிரந்தர கதவின் முன்புறம், போலீசார் தடுப்பு அமைத்ததால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அணுசக்தித் துறை, கல்பாக்கம் நகரிய பகுதி நுழைவு வாயில்களில், நிரந்தர கதவு உண்டு. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு துவங்கியபோது, கதவுகள் மூடப்பட்டன.இதையொட்டிய குறுகிய பாதையில், பாதசாரிகள், இருசக்கர வாகன பயணியர் அனுமதிக்கப்பட்டனர். இத்துறையினர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரும் வாகனங்கள் நுழைய, வெளியேற மட்டும், கதவுகள் திறக்கப்பட்டன.

இங்கு, வைரஸ் தொற்று அதிகரித்ததால், கட்டுப்பாடு நடவடிக்கையாக, கடந்த, 27ம் தேதி முதல், 10 நாட்களுக்கு, முழு ஊரடங்கை அமல்படுத்தி, நகரியம் மூடப்பட்டது. அத்தியாவசியப் பணிகளுக்கு, வெளியாட்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கி, அனுமதிக்கப்படுகின்றனர்.

இச்சூழலில், நுழைவு வாயில் கதவு அமைந்தும், இதன் முன்புறம், கல்பாக்கம் போலீசார், தகடு தடுப்பு அமைத்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.நகரிய பகுதியினர், மருத்துவ அவசரத்திற்கு, ஆம்புலன்சில், நகரிய, புதுப்பட்டினம் நுழைவுவாயிலை கடந்தே, வெளியேற வேண்டும். புதுப்பட்டினம் பகுதியினரும், அவசர முதலுதவி சிகிச்சைக்கு, இதே வாயிலை கடந்து, நகரிய அணுசக்தித் துறை மருத்துவமனை செல்வர்.

அவசர சூழலில், நுழைவு வாயில் கதவை திறந்து, எளிதாக கடக்கலாம். போலீசாரோ, இரும்பு தகடு தடுப்பையும் அமைத்துள்ளதால், அவசர, அவசிய பாதைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இத்தடுப்பை அகற்ற வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X