சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர்களை அழைத்து அரசு விழா காற்றில் பறந்த சமூக இடைவெளி

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 முதியவர்களை அழைத்து அரசு விழா காற்றில் பறந்த சமூக இடைவெளி

தேவகோட்டை:தேவகோட்டையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் முதியவர்களை அழைத்து அரசு நலத்திட்டங்கள் வழங்கியதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேவகோட்டை தாலுகாஅலுவலக வளாகத்தில்நலத் திட்ட உதவி வழங்கும் விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ. சுரேந்திரன் முன்னிலை வகித்தார். தாசில்தார் மேசியதாஸ் வரவேற்றார்.தடை உத்தரவு அமலில்உள்ள நிலையில் பயனாளிகள் 90 பேர் உட்பட அதிகாரிகள்,கட்சியினர் என 250க்கு மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

ஆனாலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை வரவழைத்து சமூக இடைவெளியின்றி சுமார் 3 மணி நேரம் நெருக்கமாக அமர வைக்கப்பட்டனர்.நலத்திட்ட உதவிகளைஅமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். ஏராளமானோர் மனு கொடுத்தனர்.தேவகோட்டையில் கொரோனா வேகமாக பரவும் நிலையில் அரசு அதிகாரிகளே கூட்டத்தை கூட்டி கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கலாமா என அங்கிருந்த மக்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X