பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் துாத்துக்குடி துயரம் சர்ச்சையில் சிக்கும் அதிகாரிகள்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 தொடரும் துாத்துக்குடி துயரம் சர்ச்சையில் சிக்கும் அதிகாரிகள்

மதுரை; துாத்துக்குடி மாவட்டத்தில் பொறுப்பேற்கும் உயர் அதிகாரிகள், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதில், 13 பேர் இறந்தனர். அப்போது தென்மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தவர் சைலேஷ்குமார் யாதவ்.'சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லவில்லை, கலவரத்தை கட்டுப்படுத்த உரிய அறிவுரைகளை வழங்கவில்லை' என சர்ச்சைக்கு ஆளானார்.

இதையடுத்து, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். துாத்துக்குடி, எஸ்.பி., மகேந்திரனும், கலெக்டர் வெங்கடேஷும் மாற்றப்பட்டனர். இதன் பின், எஸ்.பி.,யாக, முரளி ரம்பா நியமிக்கப்பட்டார். சில மாதங்களிலேயே அவரும் மாற்றப்பட்டு, மதுரை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த, அருண்பால கோபாலன் நியமிக்கப்பட்டார்.இவர் பொறுப்பேற்றது முதல், துாத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடந்தன. 'ஜாதி ரீதியான முன் விரோத கொலைகளை தடுக்கவில்லை' என சர்ச்சைக்கு உள்ளானார்.

இந்நிலையில், சாத்தான்குளம் போலீசாரால், தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் அதிருப்திக்கு ஆளாகி, எஸ்.பி., - ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி., ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது, துாத்துக்குடிக்கு புதிய, எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாரும், குட்கா ஊழல் வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்குள்ளாகி சர்ச்சையில் சிக்கியவர் தான்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
03-ஜூலை-202011:52:58 IST Report Abuse
S.P. Barucha சாத்தான் பிடித்து ஆட்டுகிறது.
Rate this:
Cancel
Raj - Trichy,இந்தியா
02-ஜூலை-202010:46:05 IST Report Abuse
Raj இவர்களின் சொத்துக்கள் ஆராய்ந்து,கூடுதலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட வேண்டும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூலை-202016:53:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னங்க அவங்க கடையே தினம் லக்ஷமரூவாய்க்கு பிசினெஸ் ஆவுமா??/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X