கோனேரிகுப்பத்தில் அடிக்கடி மின்வெட்டு | Dinamalar

கோனேரிகுப்பத்தில் அடிக்கடி மின்வெட்டு

Added : ஜூன் 30, 2020
Share

காஞ்சிபுரம் : கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர், அசோக் நகர், சண்முகா நகர் பகுதியில், 10 நாட்களாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர், அசோக் நகர், சண்முகா நகரில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 10 நாட்களுக்கும் மேலாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும், 20 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், வீட்டில் உள்ள மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளது என, இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், ஊரடங்கு உத்தரவால், வீட்டில் முடங்கியுள்ள முதியவர்கள், குழந்தைகள் மின் விசிறியை இயக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X