வைரஸ் எதிர்ப்பு தன்மை ஐகோர்ட்டில் அரசு தகவல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வைரஸ் எதிர்ப்பு தன்மை ஐகோர்ட்டில் அரசு தகவல்

Added : ஜூன் 30, 2020
Share

மதுரை; 'கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூலிகை மருந்தில், வைரசை எதிர்க்கும் தன்மை உள்ளது' என, உயர் நீதிமன்ற கிளையில், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மதுரை, சித்தா டாக்டர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:கொரோனாவுக்கு, 66 வகை மூலிகைகள் கொண்ட சித்த மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதை, கொரோனா தொற்று வரும் முன், வந்த பின், உட்கொண்டால் குணமாக்க முடியும்.இம்மருந்தை நுண்கிருமி ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்க கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க, மத்திய ஆயுஷ் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

ஜூன், 23ல் நீதிபதிகள், 'சென்னையிலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்தில், ஜூன், 26ல் மனுதாரர், மருந்து, ஆவணங்களுடன் ஆஜராகி, மருந்து தயாரிப்பு முறை மற்றம் அதன் மூலப்பொருட்கள் குறித்து, விளக்கமளிக்க வேண்டும்.'அதனடிப்படையில் ஆய்வு செய்ய, உயர்நிலை மருத்துவ நிபுணர் குழுவை தமிழக அமைக்க வேண்டும். ஆய்வின் முடிவு குறித்து, ஜூன், 30ல் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.

அரசுத் தரப்பில், 'இம்மருந்து, வைரசை எதிர்க்கும் தன்மை கொண்டது என, ஆய்வில் தெரியவந்து உள்ளது. மேலும், ஆய்வு செய்வதற்காக, டில்லியிலுள்ள மத்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X