பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணை தரக்குறைவாக பேசிய எஸ்.ஐ.,யால் சர்ச்சை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்; புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தரக்குறைவாக பேசியதாக, எஸ்.எஸ்.ஐ., மீது புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், ஆணை விழுந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி, 35; கூலித்தொழிலாளி. இவரது கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சந்திரசேகர் என்பவரை, இரண்டாவது திருமணம் செய்து, 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த, 28ம் தேதி மாலை, தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், சந்திரசேகர் குழந்தையை துாக்கிச் சென்று விட்டார். பட்டுக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, லட்சுமி புகார் அளிக்க சென்றார்.

அங்கிருந்த, எஸ்.எஸ்.ஐ., துரைராஜ், 'இதெல்லாம் ஒரு பிரச்னையா; நீ ஒரு பொம்பளையா' என, பலர் முன்னிலையில், தரக்குறைவாக பேசியுள்ளார். அழுதபடியே வெளியே வந்த லட்சுமி, நடந்தவற்றை உறவினரிடம் சொல்ல, அவர், அதை மொபைலில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.இது, பட்டுக்கோட்டை, டி.எஸ்.பி.,க்கு தெரியவந்து, அவர் விசாரணை நடத்தினார். இதையடுத்து, லட்சுமியிடம் புகார் வாங்கி, உரிய நடவடிக்கை எடுக்க, டி.எஸ்.பி., உத்தரவிட்டார். சர்ச்சையில் சிக்கிய துரைராஜ், சிறப்பாக பணியாற்றியதற்காக, முதல்வரிடம் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X