அவசியமின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம்| Dinamalar

தமிழ்நாடு

'அவசியமின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம்'

Added : ஜூன் 30, 2020
Share

கடம்பத்துார் : 'பொதுமக்கள் தேவையின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு வர வேண்டாம்' என, வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடம்பத்துார் ஒன்றியத்தில், கடம்பத்துார், பேரம்பாக்கம், விடையூர், உளுந்தை, பாப்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.கிராம பகுதி மக்கள், இந்த மருத்துவமனைகளை, தங்கள் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனை களுக்கு பொதுமக்கள் நோயாளிகளை அழைத்து வரும் போது, அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் அதிக கூட்டம் சேர்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடம்பத்துார் வட்டார மருத்துவ அலுவலர் ராகவ் கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு, நோயாளிகளை அழைத்து வரும் போது ஒருவர் மட்டும் வந்தாலே போதுமானது.மேலும், மருத்துவமனைக்கு வருபவர்கள், சமூக விலகல் கடைபிடித்து, முக கவசம் அணிந்து வர வேண்டும். பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். அலட்சியமும் காட்ட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X