தமிழ்நாடு

இந்த ஒரு நாள் போதுமே! வார சந்தையில் அலைமோதும் மக்கள்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

ஆர்.கே.பேட்டை : அதிகாரிகளின் கெடுபிடி இல்லாத நேரமாக, அதிகாலையில் வார சந்தை கூடுவது தொடர்கிறது. இதில், அலைமோதும் மக்கள் கூட்டமும், நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

ஆர்.கே.பேட்டையில், செவ்வாய், வங்கனுார், வியாழன், அம்மையார்குப்பம் மற்றும் அத்திமாஞ்சேரிபேட்டை திங்கள், ஸ்ரீகாளிகாபுரம் மற்றும் பொதட்டூர்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை என, வார சந்தை நடப்பது வழக்கம்.மேற்குறிப்பிட்ட நாட்களில், மாலை, 3:00 மணிக்கு மேல் சந்தை கூடும். இரவு, 7:00 மணி வரை நடக்கும். மூன்று மாதங்களாக, மாலை நேரத்திற்கு பதிலாக, அதிகாலையிலேயே சந்தை கூடுகிறது.

அதிகாரிகளின் கெடுபிடி, காலை, 9:00 மணிக்கு மேல் தான் இருக்கும் என்பதே இதற்கு காரணம். அதே நேரத்தில், பொதுமக்கள், சமூக இடைவெளி மற்றும் சுய பாதுகாப்பு என, எதையும் பொருட்படுத்தாமல், சந்தையில் காய்கறியை வாங்கி செல்வதில் குறியாக உள்ளனர்.ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாக்களில், 'கொரோனா' பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவது கவலை அளிக்கிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, பொதட்டூர்பேட்டையில் கூடிய சந்தையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். 11:00 மணியளவில், அதிகாரிகள் வந்து, சந்தையை கலைத்தனர்.

ஆர்.கே.பேட்டையில், நேற்று காலை கூடிய வார சந்தையில் பொதுமக்கள் வழக்கம் போல், எந்தவித பதற்றமும் இன்றி, காய்கறியை வாங்கி சென்றனர்.காய்கறி வாங்க வந்தவர்கள் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தவர்கள் என, ஏராளமானோர் குவிந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.சுற்றுப் பகுதியில் ஏதேனும் ஒரு கிராமம் என, சுழற்சியாக வாரம் முழுதும் சந்தை நடப்பதும், மக்கள் கூடுவதுமாக உள்ளதால், அந்த ஒரு நாள் பொழுதே, நோய் பரவலுக்கு வலு சேர்க்குமே' என, சமூக ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X