சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மொபைல் டவரில்' ஏறி வாலிபர் போராட்டம்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

பொன்னேரி : குடும்ப தகராறில், மனைவி மீது புகார் கொடுத்து, நடவடிக்கை இல்லை எனக்கூறி, 'மொபைல்போன் டவரில்' ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்து, வாலிபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொன்னேரி அடுத்த, வஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 27. போதை ஆசாமியான இவருக்கும், மனைவிக்கும் நேற்று குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.நேற்று, மாலை, 4:00 மணிக்கு, திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு சென்ற ரஞ்சித்குமார், மனைவி மீது புகார் கொடுத்துள்ளார்.குடும்ப பிரச்னை என்பதால், இது தொடர்பாக விசாரணை செய்வதாக போலீசார் கூறினர். 'குடி'போதையில், ரஞ்சித் குமார், திடீரென காவல் நிலையம் அருகே உள்ள மொபைல்போன் டவரின் உச்சியில் ஏறினார்.

மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.எஸ்.ஐ., சந்திரசேகர் மற்றும் போலீசார், ரஞ்சித்குமாரிடம் சாதுர்யமாக பேசி, சமாதானப்படுத்தினர். ரஞ்சித்குமாரின் மனைவியை வரவழைத்தனர். போலீசாரின் சமாதானத்தை ஏற்று, ரஞ்சித்குமார் ஒரு மணி நேரத்திற்கு பின், இறங்கினார்.பின், போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கணவர், மனைவி இருவருக்கும் அறிவுரை கூறி சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X