கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவமதிப்பு வழக்கில் ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி., ஆஜர்

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 அவமதிப்பு வழக்கில் ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி., ஆஜர்

மதுரை; சாத்தான்குளம் தந்தை, மகன் பலியான சம்பவத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கூடுதல், எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று ஆஜராகினர்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அளித்த அறிக்கையை படித்த, உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு: சாத்தான்குளம், தந்தை, மகன் இறப்பு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து பொதுநல வழக்கை தனியாக விசாரிக்கிறது.

கோவில்பட்டி மாஜிஸ்திரேட், சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக்கு சென்று உள்ளார்.துாத்துக்குடி கூடுதல், எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன் முன்னிலையில், மாஜிஸ்திரேட் விசாரணையை, போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.மாஜிஸ்திரேட்டை நோக்கி, போலீஸ்காரர் மகாராஜன் இழிவான, ஆட்சேபகரமான கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, மாஜிஸ்திரேட் எங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.இதனால், கூடுதல் எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் மீது, இந்நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடக்க, ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி., மற்றும் சாத்தான்குளம் ஸ்டேஷனில் பணிபுரியும் இதர போலீசாரை, தமிழக அரசு உடனடியாக இடமாறுதல் செய்ய வேண்டும். கூடுதல், எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேற்று நீதிபதிகள் அமர்வு முன், கூடுதல் எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆஜராகினர்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'ஒரு வாரமாக, தொடர் பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, இத்தகைய தவறு நடந்து விட்டது. அவர்கள் நிபந்தனையற்ற முறையில், வருத்தம் தெரிவித்துள்ளனர்.

'போலீஸ்காரர் மகாராஜன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். கூடுதல் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் ஸ்டேஷனில் பணிபுரிந்த போலீசார், பல்வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.நீதிபதிகள், 'அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். கூடுதல் எஸ்.பி., உட்பட மூன்று பேரும், நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.நெல்லை, டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபு, துாத்துக்குடி எஸ்.பி., அருண் பாலகோபாலனும் ஆஜராகி இருந்தனர்.உடனடியாக பணி ஒதுக்கீடுகாத்திருப்போர் பட்டியலில் இருந்த, கூடுதல் எஸ்.பி., குமார், நீலகிரி மாவட்ட, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், டி.எஸ்.பி., பிரதாபன், புதுக்கோட்டை மாவட்ட, நில அபகரிப்பு பிரிவுக்கும் நேற்று இரவு மாற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி, டி.எஸ்.பி., ராமநாதன், சாத்தான்குளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் எஸ்.பி., கோபி, துாத்துக்குடி மாவட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., திரிபாதி பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
06-ஜூலை-202005:35:34 IST Report Abuse
RaajaRaja Cholan ஒன்பது ஆண்டுகளுக்கு முன் , அடையாறு டெப்போ காவல் நிலையம் எதிர் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்ற பொழுது ஒரு இன்ஸ்பெக்டர் அவன் காவலா நிலயத்தி இறங்க வழியை அடைத்து கொண்டு நின்றான் , காவல் உடையில் அல்ல , வழிய விடு இப்படி நிற்பது அசிங்கமா இருக்கு என்ரா என்னை காவல் நிலையம் இழுத்து போனான் கத்தினான் ஒரு மணி நேரம் அசிங்கம் பேசினான் , அன்று மனது முழுவதும் அவனை கேவலமாய் திட்டி அவன் வாழ்க்கை நன்றாய் இருக்க கூடாது என்று சபித்து வந்தேன் , இதனை ஆண்டுகள் ஆகி விட்டது இன்றும் அன்று கேவலமாய் நடந்த காவல் நன்றாய் இருக்க கூடாது என்று மனதில் சபித்து வருகிரேன் . செய்யாத குற்றத்திற்கு கேவலமாய் பேசிய இவன் நன்றாக இருக்க மாட்டான் இவன் குடும்பமும் .
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
03-ஜூலை-202013:22:09 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI இவங்க என்னடான்னா ஆட்சில இருக்கும்போதே ஆட்டம் போடறாங்க திமுக ஆட்சில இல்லாதபோதே ஆட்டம்போடுறாங்க தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கை பாக்கரங்கா ஆண்டவனை வெளில விடமாட்டேங்கறாங்க கடவுளே நீதான் காப்பாத்தணும்
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
03-ஜூலை-202012:44:30 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Normally no action will be taken on IPS officer by the state Govt. But I do not understand why State Govt is not initiating disciplinary/departmental action against Gp 1 officer ADSP and DSP? It means there is some support from the political boss for whom these police officers did some favour during their tenure
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X