பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி ரயில் வழித்தடத்துக்கு முக்கியத்துவம் தேவை!ஏமாற்றத்தால் ஆர்வலர்கள் அதிருப்தி

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி ரயில் வழித்தடத்துக்கு முக்கியத்துவம் தேவை!ஏமாற்றத்தால் ஆர்வலர்கள் அதிருப்தி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்துக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இதன் மூலம், பொள்ளாச்சியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என, ரயில்வே ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பொள்ளாச்சி - கோவையை இணைக்கும் முக்கிய ரயில் வழித்தடமான பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த, 2017ல் நிறைவு பெற்றது.
அதன் பின், இரண்டு பயணிகள் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கூட இயக்கப்படவில்லை. மீட்டர் கேஜ் காலத்தில் வழித்தடத்தில் இயங்கிய ரயில்களையும் இயக்கவில்லை.மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் பயன்பெறக்கூடிய கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்க பல தரப்பினர் வலியுறுத்தியும், பாலக்காடு கோட்டம் அதற்கு செவி சாய்க்கவில்லை.இது, பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் நடவடிக்கை என ரயில்வே ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.இந்நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.பல்வேறு பகுதிகளில் இருந்து, கோவை வழியே வரும் சரக்கு ரயில்கள், போத்தனுார் வரை வந்து, அங்கிருந்து பாலக்காடு சென்று, பொள்ளாச்சி வருகின்றன.
இதன் மூலம், 60 கி.மீ., பயணத் தொலைவு அதிகரிக்கிறது. கிணத்துக்கடவு வழியே வந்தால், பயண நேரம் மற்றும் செலவு சேமிக்கப்படும்.இருந்தும், அதிக தொலைவு சுற்றியே சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 10 வேகன்களில் கோதுமை ஏற்றி வந்த சரக்கு ரயில் கூட, பாலக்காடு சுற்றியே வந்தது.இது, போத்தனுார் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி வழித்தடத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் செயல் என ரயில்வே ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
வழக்கமான ரயில் போக்குவரத்து துவங்கும் போது, கோவை - பொள்ளாச்சி இடையே போத்தனுார் - கிணத்துக்கடவு வழியே எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்க வேண்டும் என, ரயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பொதுமக்களால் வலியுறுத்தப்படும் இந்த கோரிக்கைகளை, பாலக்காடு கோட்ட அதிகாரிகள் இனியாவது நிறைவேற்ற வேண்டும். அதற்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி., ஆகியோர் வலியுறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X