பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருந்தகம் இரு நாட்களுக்கு மூடல்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

திருத்தணி, : கால்நடை மருந்தகத்தில் பணிபுரியும் உதவியாளரின் தாயாருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இரு நாட்கள் கால்நடை மருந்தகம் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, விவசாயிகள் தங்களது கால்நடைகளை ஓட்டி வந்து சிகிச்சை மற்றும் பசு மாடுகளுக்கு சினை ஊசிகள் போடப்படுகின்றனர்.இதுதவிர, ஆண்டுக்கு இருமுறை கோமாரி தடுப்பூசியும் போடப்படுகிறது.

இந்நிலையில், இந்த கால்நடை மருந்தகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரின் தாயாருக்கு, நேற்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும், கால்நடை உதவியாளருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல், குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு கால்நடை மருந்தகம் மூடப்படும் என, கால்நடை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மருந்தகத்திற்கு, கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால், இரண்டு நாட்களுக்கு அந்த மருந்தகத்தில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X