பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் மழை தீவிரம்: மேல்நீராறில் 192 மி.மீ.,பதிவு

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 வால்பாறையில் மழை தீவிரம்: மேல்நீராறில் 192 மி.மீ.,பதிவு

வால்பாறை:வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று முன் தினம் இரவு முழுதும் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.தொடர் மழையால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.மழையால், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 385 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 73 கனஅடி தண்ணீர் வீதம் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 68.29 அடியாக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்துள்ளது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 74, வால்பாறை - 83, மேல்நீராறு - 192, கீழ்நீராறு - 125 , காடம்பாறை - 10, மேல்ஆழியாறு - 8, துணக்கடவு - 6, பெருவாரிப்பள்ளம் - 3, சர்க்கார்பதி - 8, நவமலை - 3, என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X