ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரின் தந்தை படுகொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரின் தந்தை படுகொலை

Added : ஜூன் 30, 2020
Share

தஞ்சாவூர்; கும்பகோணத்தில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரின் தந்தையை, மர்ம நபர்கள், நேற்று வெட்டிப் படுகொலை செய்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவில் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன், 67. ஓய்வு பெற்ற ஆசிரியரான அவர், நேற்று இரவு, 7:00 மணியளவில், வீட்டில் இருந்தார்.அப்போது, மர்ம நபர்கள்வீடு புகுந்து, கோபாலனை சரமாரி அரிவாளால் வெட்டி தப்பினர். படுகாயங்களுடன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்தார்.நாச்சியார்கோவில் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோபாலனின் மகன் வாசுதேவன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், மண்டல பொறுப்பாளராக இருந்தவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X