பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தம்: நேற்றே பஸ்கள் காற்று வாங்கின

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
இன்று முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தம்: நேற்றே பஸ்கள் காற்று வாங்கின

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பஸ் போக்குவரத்து நேற்று இரவு, 9:00 மணியுடன் நிறுத்தப்பட்டது. மக்கள் பயணத்தை தவிர்த்ததால், பகலிலேயே பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது.கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதால், வரும், 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மண்டலங்களுக்குள் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரால், நோய் தொற்று அதிகரிப்பது கண்டறியப்பட்டது. பஸ்களை மாவட்டங்களுக்கு இடையே அனுமதித்தால், வெளி மாவட்டங்களில் இருந்து நோய் தொற்றுடன் வருவோரை கண்காணிப்பது கடினம் என்பதை உணர்ந்து, கடந்த மாத இறுதியில், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதையடுத்து, பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வரை இயங்கிய பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாவட்ட எல்லையான கோமங்கலம் வரை மட்டுமே பஸ் இயக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் உள் மாவட்ட அளவிலான பஸ் போக்குவரத்தையும் வரும், 15ம் தேதி வரை நிறுத்துவதாக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம், பஸ் போக்குவரத்து இன்று முதல் முற்றிலும் நிறுத்தப்படுகிறது.அறிவிப்பு வெளியிடப்பட்டதால், பொள்ளாச்சியில் பொதுமக்கள் பஸ் பயணத்தை பெரும்பாலும் தவிர்த்தனர். இதனால், இயங்கிய சில பஸ்களிலும், பயணிகள் கூட்டம் வெகு குறைவாக காணப்பட்டது.
பயணிகள் இல்லாத வழித்தடங்களில், பஸ்கள் இயக்கப்படவில்லை.நேற்று காலை முதலே, பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று இரவு, 7:30 மணியுடன், பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வழித்தடங்களுக்கு இயங்குவது நிறுத்தப்பட்டது. வழித்தடங்களுக்கு சென்ற பஸ்கள் திரும்பி வந்தவுடன், இரவு, 9:00 மணியுடன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.வரும், 15ம் தேதிக்கு பின், அரசு உத்தரவுக்கு ஏற்ப போக்குவரத்து துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X