தண்ணீருக்கு 2 கி.மீ., நடக்கும் மக்கள்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மக்கண்டான் கோவில்பட்டி கிராம மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படுகின்றனர்.

இந்த கிராமத்தில் 5 ஆண்டுக்கும் மேலாக தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கிராமத்தில் தண்ணீர் கிடைக்காததால் இரண்டு கி.மீ.,தொலைவில் உள்ள வேங்கைப்பட்டி ஊரணியில் குடிதண்ணீரும், ஒரு கி.மீ.,தொலைவில் உள்ள கிணற்றில் பிற தேவைக்கு தள்ளுவண்டிகளிலும் தண்ணீர் எடுத்துள்ளனர்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட போர்வெல்லில் சிறிது காலமே தண்ணீர் வந்தது. அதிலும் தற்போது கிராமத்திற்கு தேவையான தண்ணீர் வரவில்லை. இதனால் மீண்டும் பல கி.மீ., தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X