பொது செய்தி

தமிழ்நாடு

கிராம கடைகளுக்கும் 'சீல்': விதிமீறல் தடுக்க எச்சரிக்கை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:வெளிமாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி கிராமங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொரோனா பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, நோய் பரவல் தடுப்பு விதிகளை தவறாது கடைப்பிடிப்பதே தீர்வாகும்.ஆனால், கிராமங்களில் செயல்படும் கடைகள், தொழில் நிறுவனங்களில் தடுப்பு விதிகள் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாக தெரியவருகிறது. இது குறித்து, தெற்கு ஒன்றிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊராட்சிகளில் செயல்படும் கடைகள், பெட்ரோல் பங்க், ஓட்டல், டீக்கடை, சலுான், ரேஷன் கடை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் இரு தரப்பினருமே கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி, தொற்று பரவலை தடுக்க வழி செய்ய வேண்டும். தவறும் கடை, நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து'சீல்' வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X