எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் : அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
தமிழகத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ -- பாஸ்' நடைமுறை தொடரும் என, அரசு அறிவித்திருப்பது, பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால், 'இ- - பாஸ்' நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.இன்று முதல், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும், 'இ- - பாஸ்'
இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் : அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை

தமிழகத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ -- பாஸ்' நடைமுறை தொடரும் என, அரசு அறிவித்திருப்பது, பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால், 'இ- - பாஸ்' நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இன்று முதல், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும், 'இ- - பாஸ்' அவசியம் என, அரசு அறிவித்துள்ளது.
'இறப்புக்கு செல்ல விரும்புவோர், இறந்தவரின் ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். இறந்தவரின் இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். திருமணத்திற்கு செல்பவரும், திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தினரின், ரத்த சம்பந்த உறவாக இருக்க வேண்டும்' என, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிலர் தங்களின் திருமணத்தில், ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் பங்கேற்க வேண்டும் என, விரும்புகின்றனர். அதுபோன்ற நபர்கள், இ -- பாஸ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மேலும், அவசர தேவைக்கு செல்ல விரும்புவோரும், இ- - பாஸ் கிடைக்காததால், விதியை மீறி செல்கின்றனர். அதனால், நோய் பரவுவதாக கூறப்படுகிறது.இதை தடுக்க, இ- - பாஸ் வழங்கும் நடைமுறையில், அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் சிலர் கூறியதாவது:அரசு வழங்கும், 'இ -- பாஸ்'களில், 'கியூஆர் கோடு' உள்ளது. எனவே, வெளி மாவட்டம் செல்ல விரும்பும் அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி, 'இ -- பாஸ்' வழங்கலாம். மாவட்ட எல்லையில், 'இ -- பாஸ்' வைத்திருந்தால் மட்டும், உள்ளே அனுமதிக்க வேண்டும். 'கியூஆர் கோடை ஸ்கேன்' செய்யும் போதே, அவர் மாவட்டத்திற்கு வந்தது உறுதிப்படுத்தப்பட்டு, அனைத்து துறையினருக்கும், தெரிவிக்கப்பட வேண்டும்.அவர் எங்கு செல்கிறாரோ, அங்கு அவரை பரிசோதனை செய்வதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்; இது எளிதாக இருக்கும்.தற்போது, இ- - பாஸ் வழங்க மறுப்பதால், பெரும்பாலானோர், இரு சக்கர வாகனம் உட்பட ஏதேனும் வாகனத்தில் செல்கின்றனர்.

போலீஸ் சோதனை சாவடிகள் எங்கு உள்ளதோ, அதற்கான மாற்று வழியில் சென்று விடுகின்றனர். இதுபோல் வருவோரை, மாவட்ட நிர்வாகத்தால், கண்காணிக்க முடிவதில்லை. இதுபோன்ற நபர்கள், நோய் தொற்றுடன் வந்தால், அவர் செல்லும் பகுதியில், நோய் பரவல் ஏற்படுகிறது.எனவே, அரசு இ -- பாஸ் வழங்கும் நிபந்தனைகளை தளர்த்தி, அனைவரையும் அனுமதித்து, அவர்களை தனிமைப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நோய் பரவலை தடுக்கலாம். திருட்டுத்தனமாக மாவட்டங்களுக்குள் நுழைவது, போலி இ- - பாஸ் தயாரிப்பது, விற்பது போன்ற முறைகேடுகளையும் தடுக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


-- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202019:56:50 IST Report Abuse
விஸ்வநாத் ரயில் போக்குவரத்து கிடையாது, பஸ் போக்குவரத்து கிடையாது, காரில் போவதற்கு ஈ பாஸ் வேண்டும் . மார்ச் மாதம் முதல் இதுதான் நிலைமை. மக்கள் பிரதிநிதிகளும், முதல்வரும், IAS, IPS அதிகாரிகளும் அவர்களது " பணி" நிமித்தமாக மாதம் ஒரு தடவையாவது தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அலுவலக பணிகளுடன் தங்கள் சொந்த பந்தங்களை பார்த்து விட்டு வருகிறார்கள். ஈ பாஸ் வாங்க இறப்பு ஒரு காரணமாக அதற்கு இறப்புச் சான்றிதழ் வேண்டும் என்கிறார்கள்! இறந்த அன்றே இறப்புச் சான்றிதழ் பெறுவது ஒரு சாமானியனுக்கி தமிழ் நாட்டில் சாத்தியமா? நான் சென்னையில் இருக்கும் எனது மகளையும் பேத்தியையும் பார்க்க விரும்புகிறேன். இன்றைய சூழலில், அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நான் இறப்பதற்கு முன்பாவது என் மகளையும் பேத்தியையும் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. இது தங்கள் மக்களை பிரிந்திருக்கும் பல முதியோர்களின் உள்ளக் குமுறலாக இருக்கக் கூடும். மக்களின் கஷ்டங்களை தைரியமாகவும் நடுநிலையோடும் அரசுக்கு கொண்டு சேர்க்கும் தினமலருக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
01-ஜூலை-202016:04:16 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Defence personnel are coming on short leave from north India by car with valid e pass and medical certificate from the army authorities. But as soon as they reached TN trouble started. The medical certificate issued by the army authorities are not accepted by the TN police personnel. They are forcefully detained at the check post and sent to the quarantine place. They are kept for covid-19 test. Once the test result shows positive they are allowed to go to their leave place. They are not giving any detention certificate by the police personnel for the period detained in the quarantine place. Now the problem arise. The army personnel are coming on short period leave. How the detention period will be counted without the detention certificate?Already they are travelling in car for more than 3 days . They are again put into avoidable mental torture. State administration is requested to look into the case sympathetically and issue necessary orders to the detention authorities in issue detention certificate to such defence personnel so that it will help them to adjust the detention period as per the army rule.
Rate this:
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
01-ஜூலை-202011:23:33 IST Report Abuse
T.S.SUDARSAN ஈ பாஸ் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும். 4 மாதங்களுக்கு முன் மதுரை சென்ற என் மருமகள் ,பேரன், பேத்தி ஆகிய மூவரையும் சென்னைக்கு திரும்ப அழைத்துக்கொண்டு வரமுடியவில்லை. IAS IPS அதிகாரிகள் ஒவ்வரும் ஒவ்வரு விதி முறைகளை பின்பற்றுகிறார்கள். ஆகவே சென்னையில் படிக்கும் என் பேரன் பேத்தி இதுவரை கொண்டுவரமுடியவில்லை. இந்த மூன்று பேரும் என் சம்பந்தி அம்மாள் இரண்டு கால்களில் மூட்டு அறுவை சிஃஹிசைக்கு சென்றவர்கள் .எப்போது காரோண குறைந்து அவர்கள் திரும்பி வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. என் மகன் ஒரு MD மருத்துவர். அவர் இப்போது மதுரைக்கு சென்றுள்ளார். e pass கிடைத்தால் தான் இவர்களை சென்னைக்கு அழைத்து வரமுடியும். குழந்தையின் படிப்பு வீணாகப்போகிறது என்ற கவலை மேலயோங்கியிருக்கிறது. e பாஸ் கிடைக்குமா? பதில் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X