சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி கோர்ட் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 பொள்ளாச்சி கோர்ட் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி:சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.-துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் ஆகியோர் சில நாட்களுக்கு முன் போலீஸ் கஸ்டடிக்கு பின் இறந்தனர். பரபரப்பு ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்கிறது.பல்வேறு தரப்பினர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில், பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் முன், இச்சம்பவத்துக்கு வக்கீல்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும், உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட்டை அவமதித்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X