ரூ.1.17 லட்சம் அபராதம் விதிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.17 லட்சம் அபராதம் விதிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
 ரூ.1.17 லட்சம் அபராதம் விதிப்பு

ஆனைமலை:ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட, கோட்டூர், சமத்துார், சுப்பேகவுண்டன்புதுார் ஆகிய பகுதிகளில் மொத்தம், எட்டு பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனா பாதித்த பகுதிகளை 'சீல்' செய்து வீடுகளை தனிமைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடைகள், பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பொது இடங்களில், மக்கள் கூட்டமாக நிற்பதை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தவும், வருவாய்த்துறையினர் இரண்டு பறக்கும் படைகள் அமைத்துள்ளனர். துணை தாசில்தார்கள், துணை பி.டி.ஓ.,க்கள் தலைமையிலான அதிகாரிகள் பறக்கும் படையில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். தாசில்தார் வெங்கடாசலம் கூறியதாவது:இரண்டு பறக்கும் படைகள், தாலுகா பகுதி முழுவதிலும் வாகன ரோந்து சென்று, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனத்தில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கடைகள், டிபார்ட்மென்ட், நிறுவனங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு, தனிநபருக்கும், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகிறோம்.தனிநபருக்கு நுாறு ரூபாயும், நிறுவனங்கள், கடைகளுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை, 1.17 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தாசில்தார் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X