பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் நேர கட்டுப்பாடு அவசியம்: தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:'பொள்ளாச்சியில், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்,' என, தொழில்வர்த்தக சபை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை:கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், பொள்ளாச்சி பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.ஆனால், ஒரு சில வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் உதாசினப்படுத்தி, அறிவித்த நேரத்தை தாண்டி வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துள்ளனர்.வியாபாரம் முக்கியம் தான், அதை விட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் உடல் நலம் மிக முக்கியமாகும். ஆகையால், அரசும், சங்கங்களும், வர்த்தக சபையும் ஒரு சில கட்டுபாடுகளை அறிவித்துள்ளோம்.இது, வியாபாரிகளின் தொழிலுக்கு இடையூறு செய்வது நோக்கமல்ல. ஆனால், அறிவித்துள்ள கட்டுபாடுகள் மீறப்படும் போது, ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அப்பகுதி முழுவதும் 'சீல்' வைக்கப்பட்டு முழு நேரமும் பாதிக்கப்படும். இதற்கு, சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.எனவே, வியாபாரிகள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தங்களது பணியை நிறைவு செய்து ஒத்துழைக்க கேட்டு கொள்ளப்படுகிறது.ஒவ்வொரு நிறுவனத்திலும், வியாபாரம் துவங்குவதற்கு முன்பும், முடிந்த பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X