பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை,மதுரை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 39 ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மாற்றம்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

சென்னை: தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கமிஷனராக இருந்த விஸ்வநாதன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் மகேஷ்குமார் அகர்வால், நியமிக்கப்பட்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: சென்னை காவல் கமிஷனராக இருந்த விஸ்வநாதன், காவல் துறை செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக மகேஷ்குமார் அகர்வால், சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு புதிய ஐ.ஜியாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்த வரதராஜூ மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு தஞ்சை டி.ஐ.ஜி., லோகநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக ஜி. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டு உளளார். மத்திய மண்டல ஜ.ஜி.,யாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


latest tamil news


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு ஏ.டி.ஜி.பி.,ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக கணேச மூர்த்தி நியமிக்கப்பட்டார். சென்னை போக்குவரத்து போலீஸ் கமிஷனராக கண்ணன் நியமிக்கப்பட்டார்.

சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த அருண் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை காவல் துறை தலைமையக கூடுதல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

திருப்பூர் நகர காவல் கமிஷனராக சஞ்சய் குமார் சென்னை தொழில்நுட்ப ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி யாக இருந்த சுனில் குமார் மாநில மனித உரிமை டிஜிபி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் வடக்கு மண்டல இணை கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news




சென்னை போலீஸ் கமிஷனர் பதவியில் 3 ஆண்டுகளாக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து அந்த பதவியை பிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். இந்நிலையில், அவர் காவல்துறை செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால், 1972ம் ஆண்டு பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். இதனால், சட்டம் படித்த அவர், 22 வயதில், 1994ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.பி.எஸ்., அதிகாரியானார்.

தேனியிலும், தூத்துக்குடியிலும் எஸ்.பி.,யாக பணியாற்றிய அவர், 2001ம் ஆண்டு சென்னை பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து போக்குவரத்து துணை கமிஷனராக இருந்தார். இதன் பின் அயல்பணியாக 10 ஆண்டுகள் பல மாநிலங்களில் சி.பி.ஐ., அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு மாறுதலாகி வந்த அவர், ஐஜி அந்தஸ்தில் சிபிசிஐடியில் பணியாற்றினார். இதன் பின்னர் மதுரை போலீஸ் கமிஷனராகவும், தொடர்ந்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றினார். விஸ்வநாதன் நீண்ட விடுப்பில் சென்ற காலகட்டத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பையும் கவனித்தார். பின்னர் டிஜிபி அலுவலகத்தில், செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றினார். கொரோனா தடுப்பு பணியில் வடக்கு மண்டல அதிகாரியாக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால், தற்போது, சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில், சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் ரூ.5.78 கோடி ரூபாய் நோட்டுகள், ரயில் மேற்கூரை துறையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் திறமையாக பணியாற்றி, குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் சில வழக்குகளிலும் அவரது தலைமையில் பணியாற்றிய அதிகாரிகள் திறம்பட பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
01-ஜூலை-202015:39:22 IST Report Abuse
Baskar டி.ஜி.பி யை மாற்றவில்லையே ஏன். இந்த குற்றங்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளவர் அவர்தான்.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
01-ஜூலை-202014:41:53 IST Report Abuse
Srinivas இந்த மாற்றல் வேலை எதற்கு?
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
01-ஜூலை-202014:32:30 IST Report Abuse
A.Gomathinayagam இந்த மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக இருந்தால் வரவேற்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X