பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சிக்கு வரும் அனைவருக்கும் பரிசோதனை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 நகராட்சிக்கு  வரும் அனைவருக்கும் பரிசோதனை

உடுமலை:உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு வரும், அலுவலர், பொதுமக்கள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர்.உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், 'தெர்மல் ஸ்கேனர்' பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் பெறப்படுகிறது.கைகளுக்கு 'சானிடைசர்' தேய்த்த பின், அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.இந்நிலையில், நேற்று ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனைக்கு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X