பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சை பெறுபவர்களுக்கு தன்னம்பிக்கை நுால்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

உடுமலை:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் முதற்கட்ட முயற்சியாக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு, இலவசமாக நுால்கள் வழங்கப்பட்டுள்ளன.நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் நாவல்கள், கதைகள், கட்டுரை நுால்கள் வழங்கப்பட்டு மருத்துவமனையில் சிறிய நுாலகமாகவும் அமைக்கப்பட்டது. உடுமலை கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் முருகன் முன்னிலையில், நுால்கள் வழங்கப்பட்டன.முதற்கிளை நுாலக வாசகர் வட்டத்தலைவர் லெனின் பாரதி, நுாலகர் பீர்பாஷா, நாகர்கோவில் அரசு கலைக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், நுாலக வாசகர் வட்டத்தினர், பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X