பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி வரத்து குறைவு; விலை அதிகரிப்பு: மகசூல் குறைவால் விவசாயிகளுக்கு பயனில்லை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 தக்காளி வரத்து குறைவு; விலை அதிகரிப்பு: மகசூல் குறைவால் விவசாயிகளுக்கு பயனில்லை

உடுமலை;உடுமலையில், தக்காளி வரத்து குறைவு காரணமாக, விலை உயர்ந்துவருகிறது.உடுமலை பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் தக்காளியை, விவசாயிகள், உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.உடுமலை சந்தையிலுள்ள கமிஷன் கடைகளுக்கு, நாள் தோறும் சராசரியாக, 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.பருவ மழைகள் குறைவால் வறட்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், தக்காளி மகசூல் பாதித்துள்ளது. இதனால், சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ளது. அதனால், விலை உயர்ந்து வருகிறது.கடந்த வாரம், 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை விற்றது. தற்போது, வரத்து குறைவால், 450 முதல் 550 ரூபாய் வரை விற்று வருகிறது.கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'உடுமலை சந்தைக்கு தற்போது, 1,200 தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்துள்ளது. இதனால், பற்றாக்குறைஅதிகரித்து, விலைஉயர்ந்துள்ளது,' என்றனர்.விவசாயிகள் கூறியதாவது:தக்காளி நடவு செய்த, 60 வது நாள் முதல், 90 நாட்கள் வரை அறுவடை செய்ய முடியும். 30 நாட்களில், ஏக்கருக்கு ஆயிரம் பெட்டி தக்காளி வரை மகசூல் இருக்கும்.நாள் ஒன்றுக்கு, 14 கிலோ கொண்ட, 20 பெட்டிகள் வரை பறிக்க முடியும். தற்போது, வறட்சி, பூஞ்சாணம் தாக்குதல், வெயிலுக்கு பிஞ்சு பழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது.இதனால், மகசூல் பாதியாக குறைந்து, 500 பெட்டி வரை மட்டுமே கிடைக்கிறது. வரத்து குறைந்து, விலை அதிகரித்தாலும், மகசூல் குறைவு காரணமாக, லாபம் இல்லை.இவ்வாறு, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X